Subscribe Us

header ads

சவூதியில் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பிய பெண்ணிற்கு 70 சவுக்கடி தண்டனை!



சவூதியை சேர்ந்த 32 வயது பெண் வாட்ஸ் ஆப் மூலம் ஒருவரை பற்றி அவதூறாக செய்தி பரப்பியதற்காக 70 சவுக்கடிகளும், 5,332 அமெரிக்க டாலர் அபராதமும் செலுத்த வேண்டும் என்று தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் வாட்ஸ் ஆப் மூலம் ஒரு நபரை பற்றி அவதூறு பரப்பிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் முடிவில் அவருக்கு 20,000 சவுதி ரியால் (அமெரிக்க டாலர் 5,332) மற்றும் 70 சவுக்கடிகளும் தண்டனையாக வழங்கப்பட்டது. 

அந்த பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற தகவல் போலீசார் தெரிவிக்கவில்லை. சவூதி சைபர் கிரைம் சட்டத்தின் படி ஒருவரை அவமானப்படுத்துதல் அல்லது பல்வேறு தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி மற்றவர்களை பற்றி அவதூறு பரப்புதல் போன்றவற்றிக்கு 'ஒரு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 500,000 சவூதி ரியால் அபராதம்' விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments