தோ்தல் பிரச்சார்தின் போது தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இம்மாதம் 31ம் திகதிக்குள் கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் ஆரம்பித்து பின் நாடு முழுவரும் ஆயிரக்கணக்கான இலவச வைபை இணைய வசதியை ஏற்றபடுத்தப் போவதாக அறிவித்துள்ளார் தொடா்பாடல் பிரதியமைச்சா் அஜித் பீ பெரேரா.
நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின் போதே இவ்வறிவிப்பை வெளியிட்ட பிரதியமைச்சார் முதற்கட்டமாக கொழும்பு மற்றும் சுற்றுப் புற பிரதேசங்களில் 250 இடங்களிலும் பின் நாட்டின் 750 இடங்களிலும் இவ்வாறு இலவச வைபை மையங்கள் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் அவா் அனைவரும் பயன் தரும் வகையில் ரெச பல்கலைக்கழகள், தொழில்கல்வி நிறுவனங்கள், உயா்நிலை புகையிரத ஸ்தானங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், சகல போதனா, மாவட்ட மற்றும் ஏ தர வைத்தியசாலைகள், மக்கள் பூங்கா பொது நூலகங்கள், மக்கள் வெகுவாக வருகை தரும் அரச அலுகலகங்கள், மாவட்ட செயலகங்கள், மற்றும் அருட்காட்சியங்கள் போன்ற இடங்களில் இவ்வாறான மையங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments