Subscribe Us

header ads

நுரைச்சோலை அணு மின்நிலைய மோசடியில் நால்வர் கைது


528 மில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரி மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் நால்வரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம்அறிவித்துள்ளது.
நம்பிக்கை மோசடி என்ற குற்றச்சாட்டின் கீழே இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சிலோன் ஷிப்ஜின் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் காஞ்சன ரத்வத்த, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சைச்சேர்ந்த ஏம்.சி தெல்கொட, திறைச்சேரியைச்சேர்ந்நத ஆர்.எம்.கே. ரணதுங்க மற்றும் துறைமுக அதிகார சபையைச்சேர்ந்த ஆர்.எம்.ஜயவிக்ரம ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் நுரைச்சோலை லக் விஜய நிலக்கரி மின்நிலையத்துக்கு இரண்டு கப்பல்களில் கொண்டுவரப்பட்ட 528மில்லியன் ரூபாய் பெறுமதியான நிலக்கரியை இறக்கி களஞ்சியப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமையை மற்றும் அமைச்சரவை அனுமதியின்றி இந்திய நிறுவனத்துக்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளே இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பி.எம்.எஸ் படகொடவினால் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்கவிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இந்த கொடுக்கல் வாங்கல்கள் அமைச்சரவை அனுமதியின்றி முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments