Subscribe Us

header ads

-Colour Light- பழைய மாணவர்கள் அமைப்பின் மற்றுமொரு ஒன்றுகூடல்


புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் அமைப்பு தமது அங்கத்தவர்களிடையே மற்றுமொரு ஒன்றுகூடல் நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. கலர் லைட்“Colour Light” என பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்வு வரும் சனிக்கிழமை 07-03-2015 அன்று நடைபெறவுள்ளது.
அனுராதபுர வீதியில் அமைந்துள்ள Deer Camp நீச்சல் தடாகத்தில் மாலை 5 மணி முதல்  9 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்வு முற்றிலும் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கும் அதேவேளை பத்து வயதிற்கு குறைந்த ஆண் பிள்ளைகளும்  தமது பெற்றோருடன் வருகை தரலாம்.
கேளிக்கை விளையாட்டுக்கள், நீர் விளையாட்டுகள், இரவு உணவு என ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் பழைய மாணவிகள் அமைப்பு அழைக்கிறது. மேலதிக தகவல்களுக்கு ஏற்பாட்டு குழுவை அணுகலாம்.-PO-
- 071 58 68 476 -

Post a Comment

0 Comments