Subscribe Us

உலகின் வயதான நபரின் 117 ஆவது பிறந்தநாள்


உலகின் மிகவும் வய­தான நப­ராக கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் இடம்­பி­டித்­துள்ள மிஸவோ ஒகவா, தனது 117 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்­டா­டினார்.

ஜப்­பா­னிய ஒஸ்கா பிராந்­தி­யத்தில் 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி பிறந்த அவர், 2013 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் வய­தான நப­ராக கின்னஸ் உலக சாதனை பதி­வேட்டு அதி­கா­ரி­களால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டார்.

தனது நீண்ட ஆயுளின் இர­க­சியம் குறித்து தான் இன்னும் அறி­யா­துள்­ள­தாக தெரி­விக்கும் அவர், 8 மணி­நேர தூக்கம் 102 வயது வரை நிலத்தில் அமர்தல் என்­ப­வற்றை பின்­பற்றி வந்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

உணவு, உறக்கம், ஓய்­வாக இருத்தல் என்­பன நீண்ட ஆயு­ளுக்கு உறு­து­ணை­யாக அமையும் என நம்­பு­வ­தாக அவர் தெரி­வித்­தி­ருந்தார். அவர் வினா­கிரி, மீன், சோறு என்­ப­வற்றை உள்­ள­டக்­கிய சுஷி உணவை விரும்பி உண்டு வரு­கிறார். 1919 ஆம் ஆண்டு திரு­மணம் செய்த அவ­ருக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்மார் உட்­பட 3 பிள்­ளைகள் உள்­ளனர். அந்த 3 பிள்­ளை­களும் தற்­போது உயி­ருடன் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. அவ­ரது மகள்­மாரின் வயது முறையே 94 வயது மற்றும் 92 வய­தாகும். ஒக­வாவின் கணவர் 1931 ஆம் ஆண்டு மர­ண­மானார்.



Post a Comment

0 Comments