100 நாள் வேலைதிட்டத்தின் முன்னேற்றம் மற்றும் சகல தகவல்களையும் அறிந்துகொள்வதற்கு புதிய மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் 100 நாட்கள் வரையிலான வேலைதிட்டத்தின் அட்டவணை மற்றும் சகல தகவல்களும் திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு துறை திணைக்களத்தின் www.pmm.gov.ilk என்ற மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என பிரதம அமைச்சரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
100 நாள் வேலைதிட்டம் தொடர்பாக பொது மக்களின் கருத்துக்களை முன்வைப்பதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் கருத்து, பணிப்பாளர் நாயகம், திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்பு திணைக்களம், இலங்கை மத்திய வங்கி கட்டிடம், கொழும்பு 01 என்ற விலாசத்தில் அல்லது100dayafeedback@pmm.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கருத்துக்களை வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


0 Comments