புதிய அரசின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றும், பல தரப்பட்ட மக்களாளும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுக கொண்டிருந்த இலவச இண்டர்நெட் WIFI சேவை தொடர்பில் புதிய செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
இலவச WIFI வெறும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருக்கும் என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில்,
இலவச WIFI வழங்குவது தொடர்பான வேலைத்திட்டத்திற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன கட்டளை இட்டுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.
அதன்படி தெரிவு செய்யப்பட்ட முக்கிய பிரதேசங்களில் விஷேட தொழில்நுட்ப முன்னெடுப்புகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் கணினி நிபுனர் குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறசேன அவர்களை சந்தித்துள்ளது.
இந்த சேவை புதிய அரசின் நூறுநாள் வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது.


0 Comments