எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதற்கு முன்னதாக முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றத் தேர்தல்களின் பின்னர் தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை அமைக்க ஒத்துழைப்பு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஐக்கிய அரசாங்கமொன்றை அமைப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சிரத்தை காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments