ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசு அமைப்புடன் தொடர்புடைய போராளிக் குழு ஒன்றின் தலைவர் ஆளில்லா விமானத் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து வரும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஹெல்மண்ட் மாகாணத்தில் இருந்த முன்னாள் தாலிபான் தளபதியான முல்லா அப்துல் ரவுஃப், இஸ்லாமிய அரசுடனான தனது தொடர்பை கடந்த மாதம் அறிவித்திருந்தார்.
முல்லா அப்துல் ரவுஃப் இருந்த ஒரு கார் ஆளில்லா விமானத் தாக்குலில் அழிக்கப்பட்டதாக ஹெல்மண்ட் மாகாணத்தின் அதிகாரிகள் மற்றும் ஊர் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வாகனத்தில் வெடிப்பொருட்களும் இருந்தன. அவருடன் வேறு ஆறு பேர் அதில் இருந்தனர்.
முல்லா அப்துல்லாவுக்கு எவ்வளவு ஆதரவாளர்கள் இருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லையென்றாலும், தாலிபானிலிருந்து இஸ்லாமிய அரசுக்கு ஆதரவாக அவர் மாறியது குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.


0 Comments