Subscribe Us

தலையை வெட்ட வந்த விமானம்! “ஸ்கை டைவிங்” திக் திக் நிமிடங்கள் (PHOTOS,VIDEO)


தாய்லாந்தில் ஸ்கை டைவிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த ஜோடி ஒன்று அதிஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பட்டாயா(Pattaya) நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டான ஸ்கை டைவிங்கில், சுமார் 13 ஆயிரம் அடிகள் உயர பறந்து அங்கிருந்து குதிப்பது வழக்கம்.

இவ்விளையாட்டில் சுமார் 15 வருடங்கள் அனுபவம் வாய்ந்த Forest Pullman என்ற பயிற்சியாளர் கடந்த 7ம் திகதி அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் ஸ்கை டைவ் செய்ய விமானத்தில் பறந்துள்ளார்.

இந்நிலையில் இவ்விருவரும் விமானிலிருந்து குதித்த சில நொடிகளில், விமானம் இவர்களை நோக்கி வெகுவிரைவாக இறங்கியுள்ளது.

இதை பார்த்து ஆபத்தை உணர்ந்த Forest Pullman, செய்வதறியாது திகைத்துள்ளார்.

அப்போது விமானத்தின் முன்புறம் வேகமாக சுழன்றுக்கொண்டு இருந்த முன் இறக்கைகள், திடீரென அவர்களின் தலையை வெட்டுவதுபோல் வந்து நூலிழையில் விலகி சென்றுள்ளது.

கண் இமைக்கும் நேரத்தில் உயிர்பிழைத்த இருவரும் மிகுந்த கவனத்துடன் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர்.

இதுகுறித்து Forest Pullman கூறுகையில், இதுபோன்ற ஒரு நிகழ்வை தான் சந்தித்ததே இல்லை என்றும், இது தனக்கு ஒரு மறுஜென்மம் எனவும் கூறியுள்ளார்.





Post a Comment

0 Comments