பைஷல் இஸ்மாயில் -
இம்போட் மிரர் இணையத்தளம், வானொலி சேவை ஊடகவியலாளர்கள் மற்றும் அறிப்பாளர்களின் சமாதான பேரணி இன்று (27) காலை அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் ஆரம்பமானது.
இம்போட் மிரர் இணையத்தளத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ.எல்.முனாஸ் தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் இந்த சமாதா பேரணி ஆரம்பமானது.
இந்த சமாதானப் பேரணியை ஆரம்பித்து வைப்பதற்காக அட்டாளைச்சேனை பிரதேச கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த சமாதான பேரணியை ஆரம்பித்து வைத்தார்.
இந்த ஆரம்ப நிகழ்வில் குறித்த இணையத்தள ஊடகவியலாளர்களுக்கும், அறிப்பாளர்களுக்கு 2015 ஆம் ஆண்டுக்கான ஊடக அடையாள அட்டை மற்றும் இணையத்தள பெயர் பொறிக்கப்பட்ட ரீ செட் மற்றும் தொப்பிகள் போன்றன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரினால் வழங்கி வைக்கப்பட்டு இந்தப் பேரணியை ஆரம்பித்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.















0 Comments