பைஷல் இஸ்மாயில் –
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டை வரவேற்கும் நிகழ்வு நேற்று (27) மாலை அவரது சொந்த ஊடரான ஏறாவூரில் இடம்பெற்றது.
ஏறாவூர் முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயலில் விஸேட துஆப் பிரார்த்தனையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த வரவேற்பு நிகழ்வு சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் வரை பொதுமக்களால் வீதி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த ஊர்வல நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஜே.லாஹிர், எம்.அன்வர், அலிசாஹிர் மௌலானா, சிப்லி பாறூக், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









0 Comments