Subscribe Us

header ads

வாசித்துப் பாருங்கள். எப்படி இஸ்லாத்தை புரிந்து வைத்துள்ளார்கள் என்று. நாம் எம்மாத்திரம்....



ஈராக்கிலும் சிரியாவிலும் செயல்படும் இஸ்லாமிய இராச்சியம் எனப்படும் ஐ. எஸ். அமைப்பைப்பற்றி முன்பொரு இதழில் நாம் உரையாடியது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும்.

பிறிதொரு நாளில் ஐ. எஸ். போராளி ஒருவனால் கத்தோலிக்க தம்பதியினர் பயணித்த காறொன்று தடுத்து நிறுத்தப்பட்டு நீங்கள் முஸ்லிமா இல்லையா என்று கேற்கப்படுகிறது.

கத்தோலிக்க ஆண்: நான் முஸ்லிம்.

ஐ.எஸ். உறுப்பினன்: சரி அப்படியென்றால் நீ முஸ்லிமாக இருந்தால் குரானில் வருகின்ற ஒரு வசனத்தை ஓதிக்காட்டு பார்க்கலாம்.

கத்தோலிக்க ஆண் பைபலில் வருகின்ற ஒரு பகுதியை ஓதிக் காட்டுகிறான்.

ஐ. எஸ். உறுப்பினன்: ஆ சரி சரி நீங்களிருவரும் போகலாம். 

கத்தோலிக்க மனைவி: என்ன பைத்தியக்கார வேலையை செய்தீர்கள்? அந்த மனிதன் உங்களிடம் குர் ஆனை ஓதச்சொன்னால் நீங்கள் பைபலை ஓதினீர்களே. நீங்கள் சொன்னது பொய்யென்று தெரிந்திருந்தால் அவன் நம் இருவரதும் கழுத்தையல்லவா வெட்டி இருப்பான்..

கார் கொஞ்ச தூரம் சென்ற பின்னர் அதனை நிறுத்திய கணவன் மனைவியிடம் சொன்னான்.

''கலவரப்படாமல் இரு எனக்கு நன்றாகத் தெரியும் அவனுக்கு குர் ஆனைப்பற்றி தெரியாதென்பது...அவனுக்கு குரானைப்பற்றி தெரிந்திருந்தால் ஒரு நாளும் அவன் அப்பாவி மனிதர்களை கொல்ல மாட்டான்" 

(sambima@yahoo.com)

-HAJA SAHABDEEN-

Post a Comment

0 Comments