Subscribe Us

header ads

'பெரிய கரிசலின் எதிர்காலம்' என்ற தொனிப்பொருளில் கத்தாரில் கூட்டம் - (PHOTOS)

பெரிய கரிசல் அபிவிருத்தி சங்கம் கத்தார்

கூட்ட அறிக்கை

பெரிய கரிசல் அபிவிருத்தி சங்கத்தின் இரண்டாவது ஒன்றுகூடல் 13-02-2015 அன்று கத்தாரில் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. இங்கு எமது அங்கத்தவர்களால் மிகவும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் ஆராயப்பட்டன.
அவை:

1> ஊரில் கல்விசார் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல ஆர்வமுள்ள செயற்திறன் மிக்க 10 உறுப்பினர்களை கொண்ட இளைஞ்சர் சங்கம் ஒன்றை ஸ்தாபித்தல் [ Educational Development Society ]

2> ஆரம்ப கட்ட செயற்திட்டமாக அஹதியா வகுப்பை ஸ்தாபித்தல்.

3> ஊரின் பள்ளி நிர்வாக சபை [Trusty Board], பாடசாலை அபிவிருத்தி சங்கம் [School Development Society], பழைய மாணவர்கள் சங்கம் [Old Boys Association] போன்ற அமைப்புக்களுடன் ஒரு ஒழுங்கு படுத்தப்பட்ட இணைப்பினை பேணுதல்.

4> தற்போது நிலவும் கல்வி, இஸ்லாம் மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் சம்பந்தமான பிரட்சினைகளும் அதனை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன.

5> ஏனைய ஊர்களில் வசிக்கும் பெரிய கரிசல் மக்களை ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைப்பது பற்றிய ஆலோசனைகள்.
6> எமது அமைப்பின் எதிர்கால செயத்திட்டன்களை முன்னெடுப்பதில் உள்ள சவால்களும். அதற்கான ஆலோசனைகளும்.
7> புதுக்குடியிருப்பு மற்றும் எமது சங்கத்துக்கிடையில் நல்ல உறவு நிலையை பேணுதல். 
8> சில பொறுப்புக்கள் உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
9> நிதியை பெற்றுக்கொள்ளும் மூலங்களும் அதனை வினைத்திறனாக பயன்படுத்தும் உக்திகளும். 

பின்னர் மாலை 6 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது. பல அசௌகரியங்களுக்கு மத்தியில் இந்த கூட்டத்தினை ஏற்பாடு செய்த எமது உறுப்பினர்கலுக்கு மனமார்ந்த நன்றிகள்.

படங்கள்:






 - - பவாஸ் - 

Post a Comment

0 Comments