(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை சென்னல் கிராமத்திலுள்ள அறபா மகளிர் சங்க பிரதிநிதிகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரிற்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் கடந்த 9 வருட காலமாக இயங்கிவருகின்ற இவ்அமைப்பின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் சுயதொழில் முயற்சி தொடர்பாக கலந்துரையாடலில் சங்கத்தின் பிரதிநிதிகள் , எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு சங்கத்தின் அங்கத்தவர்களும் கோரிக்கையும் விடுத்தனர்.
இதன்போது முன்னாள் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான எம்.ரி.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை தபால் நிலைய பொறுப்பதிகாரி எம்.எம்.யுனைதீன், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் வை.வீ.சலீம், சம்மாந்துறை சிப்ஹா அமைப்பின் ஸ்தாபக தலைவர் எஸ்.எல்.ஏ.நஸார், மாஹிர் பவுண்டேசன் அமைப்பின் அலுவலக இணைப்பாளர் எம்.ஜே.எம்.இர்பான் மௌலவி உட்பட அமைப்பின் பிரதிநிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments