பி. முஹாஜிரீன்
அம்பாறை தமண பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குநார கிராமத்தில் பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா (ஜெஸ்கா) நிறுவனத்தினால் புதிதாக ரூபா 02 இலட்சம் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட குடிநீர் கிணறு இன்று (18) புதன்கிழமை மக்களின் பாவனைக்காக வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டுள்ளது.
மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் இப்பிரதேச மக்கள் இதுவரை காலமும் குடிநீருக்காக பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்தனர். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்குடிநீர்க் கிணறு மூலம் 50 குடு;பங்கள் நன்மையடையவுள்ளன.
புதிய குடிநீர் கிணற்றிணை பாலமுனை ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா நிறுவனத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஐ.எல்.எம் ஹாஸீம் மதனி (சூரி), தமண தரி தர்மராஜ விகாரதிபதி கோமந்த கிமி ஆகியோர் கலந்து கொண்டு வைபவரீதியாக மக்களிடம் கையளித்தனர்.
இக்குடிநீர் நிர்மாணிக்கப்பட்டமைக்காக பொது மக்கள் ஜம்மியத்துஸ் ஸஹ்வா அல்-கைரியா (ஜெஸ்கா) நிறுவனத்தினருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.







0 Comments