செல்பி எடுக்க உலகளவில் சிறந்த இடம் ஈபிள் கோபுரம் தான் என பிரித்தானியாவை சேர்ந்த சுற்றுலா நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
உலகில் எந்த இடம் செல்பி எடுக்க சிறந்ததாக இருக்கும் என்பதை அறிய பிரித்தானியாவை சேர்ந்த Attraction Tix என்ற சுற்றுலா பயணச்சீட்டுகளை பதிவு செய்யும் நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வு குறித்து அந்நிறுவனம் கூறியதாவது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முன்பு தற்போதைய ஆண்டில் மட்டும் 10,700 நபர்கள் செல்பி எடுத்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக ஈபிள் கோபுரத்தின் முன்பு நின்று தரையிலிருந்து, அதன் உச்சத்தை தொடவதுபோல் செல்பி எடுப்பதையே அதிகமானோர் விரும்பியுள்ளனர் என்றும் எனவே இந்த ஆய்வில் ஈபிள் கோபுரமே செல்பி எடுப்பதில் முதலிடத்தை பிடித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து செல்பி எடுக்க உலகின் சிறந்த மற்ற 9 இடங்களையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அவை
1. டிஸ்னி வோர்ல்ட்(Disney World), Florida (9,870)
2. பூர்ஜ் கலிஃபா(Burj Khalifa), Dubai (8,860)
3. பிக் பென்(Big Ben), London (8,780)
4. எம்பையர் ஸ்டேட் பில்டிங்(Empire State Building), New York (8,430)
5. சங்ரடா ஃபாமிலியா (Sagrada Familia), Barcelona (4,970)
6. டிஸ்னிலேண்ட் (Disneyland) Paris (4,740)
7. கொல்லோசியம் (Colosseum), Rome (4,670)
8. டாப் ஆஃப் தி ராக்(Top of the Rock), New York (4,290)
9. லண்டன் பிரிட்ஜ்( London Bridge), London (3,820)


0 Comments