Subscribe Us

தத்தெடுத்த குழந்தைக்கு கல்லீரலை தானம் செய்த தந்தை! நெஞ்சை உருக்கும் சம்பவம்

கனடாவில் 3 வயது குழந்தையை உயிர்பிழைக்க செய்த தந்தையின் செயல் நெஞ்சை உருக்குவதாய் உள்ளது.

மைக்கேல் வாக்னர்- ஜோஹனே(Wagner-Johanne) என்ற கனடிய தம்பதியினர், வியட்நாமில் மோசமான உடல்நலத்துடன் அனாதை விடுதியில் இருந்த 18 மாத இரட்டை பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

குழந்தைகளுடைய மரபணு கோளாறு கல்லீரல், இதயம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் கல்லீரல் செயல்பாடு மிகவும் மோசமானதையடுத்து, அவர்களுக்கு மாற்று உடல் உறுப்புகள் பொருத்துவதன் மூலமே அவர்களுடைய உயிரை காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே 3 வயது ஆகும் குழந்தைகளில் ஒருவருக்கு, அவர்களை தத்தெடுத்த தந்தை வாக்னர் தனது கல்லீரலை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து சிறுமிகளின் வளர்ப்பு தாயான ஜோஹனே கூறுகையில், எனது சிறிய குழந்தையை உயிர்பிழைக்க செய்ய இதுவரையில் எந்த ஒரு தந்தையும் செய்திராதவகையில் எனது கணவர் அவரது உடல் உறுப்பை கொடுத்துள்ளார் என்றும் அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தான் நலமாக இருப்பதாக கூறிய மைக்கேல் வாக்னர், மற்றொரு சிறுமியின் கல்லீரலுக்காக காத்திருப்பதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments