பி. முஹாஜிரீன்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பாலமுனை அமைப்பாளரும் அதிபருமான எஸ்.எம்.எம். ஹனீபா தேசிய காங்கிரஸிலிருந்து விலகி மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் முன்னாள் செயலாளர் எம்.ஏ. சாதாத்தின் முயற்சியினால் முன்னாள் பாலமுனை அமைப்பாளரும் Nதுசிய நாங்கிரஸன் அம்பாரை மாவட்ட செயலாளருமான எஸ்.எம்.எம். ஹனீபா, தேசிய காங்கிரஸின் பாலமுனை இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான ஐ.ஏ. சிறாஜ் உள்ளிட்ட Nதுசிய காங்கிரஸின் பல முக்கியஸ்தர்கள் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸிலிருந்து விலகி கடந்த சனிக்கிழமை (31) பொத்துவிலில் வைத்து மீண்டும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, மிக விரைவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டு சில காரணங்களுக்காக விலகி மாற்றுக் கட்சிகளில் இணைந்துள்ள பாலமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்த இவ்வாறான நூற்றுக்கணக்கான முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளவிருப்பதாகஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாலமுனை மத்திய குழுவின் முன்னாள் செயலாளர் எம்.ஏ. சாதாத் தெரிவித்தார்.






0 Comments