2015.02.21-ம் திகதி இரவு 9.00 - 11.00 வரை சிரச FM வானொலியில் நடந்த நேர்முக நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருந்தேன், மாஷா அல்லாஹ். இரு பெரும் புகழ் பெற்ற இலக்கியவாதிகளான ஊடகவியலாளர் காமினி வியங்கொடவும் கலைஞர் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவரவும் "இனங்களுக்கிடையிலான சகவாழ்வின் அவசியம்" பற்றி வரலாற்று ரீதியான ஆதாரங்களோடு கருத்துக்களை முன்வைத்தார்கள்.
இடைக்கிடையே இனவாத (சிங்கள) கருத்துக்களை முன்வைத்த நேயர்கள் பலர் கேட்ட கேள்விகளுக்கு அழகாகவும் பொறுமையாகவும் பதிலளித்த விதம் அற்புதமாக இருந்தது.
மைத்ரீயின் ஆட்சியை முன்கொண்டு செல்வதில் மஹிந்தவின் ஆட்சியில் ஊறிப்போய் அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை சுய (இயல்பு) நிலைக்கு கொண்டு வருவதில் உள்ள சிரமத்தையும் அழகான முறையில் தர்க்க ரீதியாக முன்வைத்தார்கள்.
மஹிந்த வெற்றி பெற்றிருந்தால் சிறுபான்மை இனத்தை விட பெரும்பான்மை சிங்களவர்களஞக்கு ஏற்பட இருந்த அவலங்களையும் முன் வைத்தார்கள். (இன்னும் மஹிந்தவின் நாமத்தை ஜெபித்துக் கொண்டிருக்கும் நபர்கள் கவனிக்க)
ஒவ்வொரு சனிக்கிழமையும் 98.2 மற்றும் 98.4 அலை வரிசைகளில் இந்த நிகழ்ச்சியினை நடத்த சிரச FM வானொலி திட்டமிட்டுள்ளதாகவும், 300 நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி தேர்தலின் போது சிரச FM, TV ஆகியன ஆற்றிய சேவை பாராட்டுக்குரியது.
ஹாஜா ஷஹாப்தீன்
-TPT-


0 Comments