Subscribe Us

மோடி டீ விற்றதற்கான ஆதாரம் இல்லையாம்!



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இளம்வயதில் ரயில்வே பிளாட்பாரங்களிலும், ரயில் பெட்டிகளின் உள்ளேயும் டீ விற்றதாக கூறி வருகிறார். 

அவருக்கு ரயில்வே துறையினர் ஏதாவது அனுமதி (பாஸ்) அல்லது பதிவு எண் கொடுத்திருந்தனரா? என காங்கிரஸ் பிரமுகரும், சமூக ஆர்வலருமான தெஹ்சீன் பூனவாலா என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ரயில்வே வாரியத்துக்கு கேள்வி அனுப்பியிருந்தார். 

இதற்கு பதில் அனுப்பியுள்ள ரயில்வே துறையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறை இயக்குனரகம், ‘இது தொடர்பான எந்த தகவலும் எங்களிடம் இல்லை’ என தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments