சமையல் ஒரு கலை, அதிலும் சமைத்த உணவுகளை ரசித்து புசிப்பது தனியானதொரு கலை.
கலை
உலகில் பல சாதனையாளர்களை மேடை போட்டு பாராட்டும் சமூகம் இன்று இந்த சமையல்
கலை வல்லுனர்களுக்கும் மேடை அமைப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
அந்த வகையில் எங்கள் வீட்டு தோட்டத்தில் மலர்ந்த மல்லிகைக்யொன்று லண்டன்
மாநகரில் வாசம் வீசுகிறது.
கற்பிட்டி மண்ணில் பல மைந்தர்கள் தோன்றி உலகளவில் மின்னி மறைந்ததுண்டு.
அந்த வகையில் இன்று சமையல் கலையில் லண்டன் மாநகரில் Alpha LSG sky chef (
flight catering ) London Heathrow என்ற ஹோட்டலில் தனது கை வண்ணத்தால்
மக்களை பிரமிக்க வைக்கும் கற்பிட்டியின் மைந்தன்தான் Chef Nawfath
.
இவர் கற்பிட்டியைச் சேர்ந்த ரசூல்தீன், திருமதி ரஷீதா உம்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வரும், அல் அக்ஸா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது சமையல் தொடர்பான டிப்ளோம கற்கையை நீர்கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டல் முகாமை கல்வி கற்று துபாய் நாட்டிற்கு சென்றிருந்தார்.
அங்கும் அவரது சமையல் தொடர்பான கற்கையை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
இவரது இந்த பணி மென்மேலும் வளர கற்பிட்டி மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்.































































0 Comments