Subscribe Us

header ads

இன்று மு.காவின் புல்மோட்டை காரியாலயம் அமைச்சர் ஹக்கிமினால் திறந்து வைப்பு

புல்மோட்டையிலிருந்து - பைஷல் இஸ்மாயில் –


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் திருகோணமலை மாவட்ட  புல்மோட்டை பிரதேச காரியாலயம் இன்று (23) பி.ப. 2.00 மணியளவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீமினால் திறந்து வைக்கப்பட்டன.

திருகோணமலை மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.அன்வர் தலைமையில் இடம்பெற்றது. இக்காரியாலய திறப்பு விழாவின் பிரதம அதிதி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான எஸ்.எச்.தௌபிக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இக்காரியாலயத்தில் அதிதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த குறிப்பு புத்தகத்தில் கலந்து கொண்ட அதிதிகள் தங்களின் குறிப்பினை இட்டனர்.




Post a Comment

0 Comments