முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ள்தாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.
கொழும்பில் தற்போது நடைபெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
போலியான ஆவணமொன்றை தயாரித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவிற்கமைய, இன்று முற்பகல் 11.30 அளவில் பௌதாலோக மாவத்தை பகுதியில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.


0 Comments