Subscribe Us

header ads

விடுமுறை கேட்கும் பசில் ராஜபக்ச



முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 3 மாதங்களுக்கு பாராளுமன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் இருப்பதற்கான அனுமதி கேட்டுள்ளார்.

சபாநாயகர் சமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுமுறை குறித்து அறிவிக்கும் அறிவித்தலை விடுத்ததன் பின்னர் எதிர்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மூலம் பசில் ராஜபக்சவின் விடுமுறை அனுமதி பத்திரம் சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட பொழுது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க பசிலின் விடுமுறை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

பசில் ராஜபக்ச தனிப்பட்ட காரியங்களுக்காகவா அல்லது சுகவீனம் காரணமாகவா விடுமுறை அறிவித்துள்ளார் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஒருவர் விடுமுறை எடுப்பதற்கு முன்னர் இவ்வாறு அறிவித்தல் ஒன்று விடுப்பது சிறப்பான விடயம் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments