சீனாவுடன் தொடர்ந்தும் உறவுகளை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
சீனாவின் புதுவருடத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள செய்தியிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
சீன ஜனாதிபதி கடந்த செப்டம்பரில் இலங்கைக்கு வந்த போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டதாக மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் சீனாவின் புதிய வருடத்தில் இலங்கையுடனான உறவு வலுப்பெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


0 Comments