Subscribe Us

மகிந்தவின் ஊழல் நிறைந்த அரசாங்கத்தினால் மைத்திரிக்கு வெற்றி!: சம்பிக்க ரணவக்க


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது எவ்வித அதிசயத்தினாலும் இடம்பெற்ற ஒன்றல்ல என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நிறுவனத்தில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான தேசிய இயக்க மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் எங்களுக்கு தெரியும் நிறைய பேர் மகிந்த ராஜபக்சவிற்கு கிடைத்த 58 லட்ச வாக்குகள் தொடர்பாகவே பேசுகிறார்கள்.

பாரிய பணம் செலவு செய்து நடத்தப்பட்ட தேர்தல் வியாபாரத்திரத்தின் மூலமே அவ்வளவு வாக்குகளை பெற்றுக்கொள்ள முடிந்தது.

சகல ஊடக நீதிகளையும் உடைத்து பிரச்சார நடவடிக்கைகள் இடம் பெற்றது. அப்படியெல்லாம் செய்தும் எப்படி தோல்வியுற்றார் என்பதே இன்னமும் சிலருக்கு நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

மைத்திரிபால தமிழ் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றார், முஸ்லிம் மக்களின் வாக்குகள் மூலம் வெற்றி பெற்றார், ஐ.தே.க மூலம் வெற்றி பெற்றார், ஜே.வி.பியினரால் வெற்றி பெற்றார்கள் என்று சிலர் பேசுகிறார்கள் அவர்கள் அனைவரது ஆதரவும் கிடைத்தது அது உண்மை.

ஆனாலும் மகிந்த 57 லட்ச வாக்குகள் தேர்தல் வியாபாரத்தின் மூலம் பெற்றுக்கொண்டும் தோல்வியடைந்ததன் காரணம் இந்த ஊழல் மோசடி தொடர்பாக மக்களினுள் ஏற்பட்ட சமூக கோட்பாட்டினாலேயே, விசேடமாக வல்லுனர்களின் சமூக கோட்பாட்டினாலேயே என அமைச்சர் பாட்டலி சமபிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments