Subscribe Us

மஹிந்தவை மின்சார நாற்காலியில் அமர செய்வது தற்கொலை முயற்சியாகும்: ஹெல உறுமய


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு உண்டான கௌரவத்தை அளிக்கத் தயங்கப் போவதில்லை என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவை மின்சார நாற்காலியில் இருத்தி தண்டிக்க எவரேனும் முயற்சித்தால் அது தற்கொலை முயற்சியாகும். அவ்வாறான முயற்சிக்கு நாம் ஒரு போதும் இடமளிக்க மாட்டோம்.

மஹிந்த ராஜபக்ச மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. மஹிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலியில் அமர்த்தி தண்டிக்கவோ அல்லது அவருக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தவோ இமளிக்கப்பட மாட்டாது என ரத்ன தேரர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments