Subscribe Us

கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமானதாக நிறைவேற்றம்.

(பைஷல் இஸ்மாயில்)


கிழக்கு மாகாண சபையின் வரவு செலவுத்திட்டம் நேற்று (10) அனைத்துக் கட்சியின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.

கிழக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று காலை 10 மணிக்கு தவிசாளர் ஆரியபதி கலபதி தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த சபை அமர்வில் புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் மற்றும் புதிய உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா ஆகியோரை வரவேற்று 2015 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டன. இதன்போது வரவு செலவுத்திட்டம் முதலமைச்சர் ஹாபீஸ் நஸீரினால் வாசிக்கப்பட்டபோது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்களின் ஆரவினை தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments