சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தினுள் மருத்துவத் துறைக்காக ஆரம்ப வைத்தியசாலை ஒன்றினை நிர்மாணிப்பதற்காக ரூ.2613 கோடி ஒதுக்குவதற்காக கெபினட் அனுமதியைப் பெற்றுக்கொள்ள கோதாபய ராஜபக்ஷ நேரடியாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதுடன் மஹிந்த ராஜபக்ஷவினால் இவ் கெபினட் மனு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி சமர்பிக்கப்பட்டுள்ளது.
இதில் விஷேட அம்சம்தான் இவ் மருத்துவத்துறைக்காக கனடா அதிகாரிகளினால் 8 பேர் வருடத்திற்கு இணைத்துக் கொள்ளப்படுவதுடன் 100 இற்கும் மேற்பட்டோரை பணம் செலுத்தி மருத்துவப் பட்டப்படிப்பை பெரும் மாணவர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
2014 வருடத்திற்காக ரூ. 2338 கோடி உயர் கல்வி அமைச்சினால் இப் பாதுகாப்புப் பல்கலைக்கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்ததுடன் மருத்துவம், பொறியியல்,சட்டம்,பொது சுகாதாரம், முகாமைத்துவம் ஆகிய இளமாணிப் பட்டங்களை பணத்திற்காக விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதில் உயர்கல்வி அமைச்சினால் மருத்துவத்துறைக்கு மட்டும் ஏனைய துறைகளை விட அதிகமான தொகை ஒதுக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


0 Comments