பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த புதிய முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் வரவேற்கும் நிகழ்வு நேற்று (10) மாகாண சபையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புதிய முதலமைச்சர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர்களை முதலமைச்சின் நிருவாகத்தினர் வரவேற்றனர்.
இதில் புதிய முதல்வர் ஹாபிஸ் நஸீர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்து மாகாண சபை வளாகத்தில் உள்ள இலங்கையின் தேசிய கொடியினை ஏற்றிவைத்தார். அதனையடுத்து அங்கு உரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுடன்ற உறுப்பினரும் பிரதி போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.தௌபிக், முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.








0 Comments