ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரத்பூர் என்ற கிராமத்தில் தொண்டு நிறுவன விழா ஒன்றில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், தன்னலமற்ற நோக்கத்துடன் கொண்ட ஒரு செயலை செய்வது நல்லது.
ஆனால் அன்னை தெரசாவின் செயல்பாடு, சேவை என்ற பெயரில் கிறிஸ்தவ மதத்திற்கு மதமாற்றம் செய்வதாக இருந்தது என்று பேசியுள்ளார்.
மேலும் மோகன் பகவத்துடன் விழாவில் கலந்து கொண்ட எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் டி.ஜி.பி. பிரகாஷ் சிங் பேசுகையில், இந்தியாவில் அன்னை தெரசாவை விட நிறைய தொண்டு நிறுவனங்கள் சிறப்பாக மக்களுக்கு சேவை புரிந்தன.
ஆனால் ஊடகங்களின் உதவியால் கிறிஸ்தவர்கள் அவரை மிகவும் பிரபலமாக்கினர் என்று கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வை சேர்ந்த சிலர், கடந்த சில மாதமாக மதப் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிறிஸ்தவ தேசிய விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, எனது அரசு அனைத்து மதங்களையும் சம மதிப்புடன் நடத்தும் என்றும் மத வெறுப்பை தூண்டி விடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. |
0 Comments