மகிந்த ராஜபக்ச தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு பதிலாக இனவாதத்தை பரப்பி வருகிறார் எனவும், அதற்கு இடமளிக்க போவதில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குருணாகலில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இனவாதத்தை கொண்டு வர முயற்சித்தால், அதற்கும் எங்களிடம் பதில் இருக்கின்றது. சில சிங்கள பத்திரிகைகள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை பரப்பி வருகின்றன.
இனவாதத்தை பரப்பும் அந்த பத்திரிகைகளுக்கு எதிராக மாபெரும் கூட்டத்தை கொழும்பில் நடத்தி வீதியில் இறங்குவோம் எனவும் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.


0 Comments