மேற்கு அவுஸ்திரேலியாவின் பேர்ன்பெரி நகரிலுள்ள மோஜோஸ் உணவகத்தில் உணவருந்திய பிரான்ஸ் தம்பதிகள் அதற்குரிய பணத்தை செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளனர்.
இவர்கள் வயிறுபுடைக்க சாப்பிட்டு மதுபானமும் அருந்தி விட்டு சிகரெட் பிடிக்க வெளியே செல்வதைப் போல், ஹோட்டலில் இருந்து மெதுவாக நழுவினார்கள்.
ஹோட்டலுக்கு செலுத்த வேண்டிய 230 டொலரை செலுத்தாமல் தப்டியோடியுள்ளனர்.
எனினும் குறித்த தம்பதியின் உருவங்கள் ஹோட்டல் கமராக்களில் பதிவாகியிருந்தன. ஹோட்டல் நிர்வாகிகள் படங்களை பேஸ்புக் பக்கத்தில் தரவேற்றம் செய்தார்கள். இந்தப் படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாக பரவிய சமயம், இவற்றை தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பத் தொடங்கின.
கடைசியில், களவாக சாப்பிட்டுச் சென்ற தம்பதிகளால் வெளியே தலைகாட்ட முடியாமல் போனது. இவர்கள் நான்கு நாட்கள் கழித்து ஹோட்டலுக்குத் திரும்பி வந்து உரிய பணத்தை செலுத்தி விட்டுச் சென்றார்கள்.


0 Comments