அவுஸ்திரேலியாவிலும் நிவ்சீலன்டிலும் எதிர்வரும் 14-ம் திகதி முதல் ஆரம்பமாகும் இலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் உத்தியோகபூர்வ அனுமதி 'ரூபவாஹினி'க்குக் கிடைக்கலாம் என அதன் உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியை இலங்கை தொலைக்காட்சி சேவைகளில் ஒளிபரப்புவதற்கான உத்தியோகபூர்வ அனுமதியைப் பெற்றிருந்த கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வர்க் (CSN) சேவை இவ் அனுமதியை இழக்கும் நிலை உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த ஊடக அமைச்சர் கயான் கருணாதிலக CSN தொலைக்காட்சி சேவையின் அனுமதி தொடர்பாக பாராளுமன்றத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய CSN தொலைக்காட்சி சேவை நிறுவனம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமானது எனக் கூறப்படுவதுடன், இந் நிறுவனம் வரிப் பணம் செலுத்தத் தவறியதால் பாரிய தொகையொன்று வரி நிலுவையாக அறவிடப்படும் என்று நடந்துமுடிந்த வரவு செலவு திட்ட அமர்வின்போது அரசாங்கம் தீர்மானித்தது.
நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் இலங்கை கலந்துகொள்ளும் போட்டிகளின் கால அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் நேரங்கள் இலங்கை நேரப்படி வழங்கப்பட்டுள்ளது.
நன்றி -The Puttalam Times-


0 Comments