ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரமிக்கவர்கள் பற்றிய தகவல்கள் அறிந்த கைதிகள் பட்டியலிடப்பட்டு அதனடிப்படையில் முன்னைய அரசாங்க காலத்தில் வெலிகடை சிறையில் இருந்த கைதிகள் சிலர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகடை சிறையில் கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்த நீதியமைச்சு நியமித்த குழு நடத்திய விசாரணையில் இந்த தகவல் உறுதியாகியுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக விசாரணை நடத்த விசேட சுயாதீன ஆணைக்குழுவை நியமிக்க நீதியமைச்சர் தீர்மானித்துள்ளார்.
வெலிகடை சிறையில் கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டமை தொடர்பில் கடந்த அரசாங்கம் போலியான ஆணைக்குழுவை நியமித்து உண்மைகளை மூடி மறைத்துள்ளதாகவும் கைதிகள் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்ததன் மூலம் இந்த தகவல் வெளியாகியதாகவும் சிரேஷ்ட சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கைதிகள் கொலை தொடர்பான உண்மையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட உள்ளதுடன் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்க நீதியமைச்சு தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments