உத்தேச அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் அடுத்த இரண்டு வாரங்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன் குறித்த வரைவுத் திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய தேசிய நிறைவேற்று பேரவை ஏகமானதாக அனுமதியை வழங்கியுள்ளது.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க தேசிய நிறைவேற்று பேரவையில் உள்ள சகல உறுப்பினர்களும் இணங்கியுள்ளதுடன் அதுவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சில அதிகாரங்களை வழங்குவது பற்றியும் பேரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக குறைப்பது, 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது, கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவியை இரத்துச் செய்வது போன்றவற்றுக்கும் தேசிய நிறைவேற்று பேரவை இணங்கியுள்ளது.


0 Comments