கே.எம்.அன்சார் - சம்மாந்துறை
முன்னால் அமைச்சர் மன்சூர் அவர்களின் முயற்சியால் சம்மாந்துறையில் ஆடைத் தொழிற்சாலைக்கான வேலைகள் ஆரம்பம்.
முன்னால்
கிழக்கு மாகாண அமைச்சர் எம்.ஐ்.எம்.மன்சூர் அவர்களின் முயற்சியினால்
கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஆடைத்தொழிற்சாலையொன்று
சம்மாந்துறையில் நிறுவப்படவுள்ள விடயம் யாவரும் அறிந்ததே.
இவ்வாடைத்
தொழிற்சாலைக்கான கட்டிட வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக
,இவ்வாடைத்தொழிற்சாலையை நடாத்தவிருக்கும் ஹமீடியாஸ் நிறுவத்தின் தலைவர்
மற்றும் பிரமுகர்கள் அடங்கிய குழு அமைச்சர் சகிதம் அதற்கென ஒதுக்கப்பட்ட
காணியை நேற்று 2015.02.17 ஆம் திகதி பார்வையிட்டனர்.
இவ்
ஆடைத் தொழிற்சாலையை அமைக்கவென சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்
அவர்களால் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட 5 ஏக்கர் காணியையும் மண் போட்டு 5 அடி
உயரத்திற்கு உயர்த்தித் தரவேண்டுமென கேட்டுக்கொண்டதற்கு இணங்க அதனை
எவ்வாறாயினும் செய்து தருவதாக அமைச்சர் மன்சூர் அவர்கள் வாக்குறுதி
அளித்துள்ளார்.
மேலும்
இவ் ஆடைச் தொழிற்சாலையினால் சம்மாந்துறையில் உள்ள இளைஞர் யுவதிகள்
மாத்திரமல்ல ஏனைய ஊர்களைச் சேர்ந்த இளைஞர்-யுவதிகளும் வேலைவாய்ப்பு
விடயத்தில் மிகுந்த நன்மையடைவர் எனவும், இதுவே தனது கனவு எனவும் கௌர
முன்னால் அமைச்சர் மன்சூர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.







0 Comments