அப்பாவின் இறுதி ஊர்வலத்திற்காக காத்திருந்த அனைவரும் அதனை பாதியில் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
நேற்று கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மகிந்தவின் பயணம் ஆரம்பமாகியுள்ளது அவர் மீண்டும் வருகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
அப்பா இறந்து விட்டார் என கூறி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சவப்பெட்டியில் அடைத்து புதைக்க நினைத்தவர்களுக்கு அது முடியவில்லை.
நாங்கள் மகிந்தவின் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். மீண்டும் அவர் வருவார் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.


0 Comments