யுத்த வெற்றியை ஈட்டித் தந்த நாயகன் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக
நுகேகொடயில் 5000 பேர் கூடினால் தான் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என
மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி சவால் விட்டிருந்தார். அவரை
அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் எனும் கடிதத்துடன் இந்தக்
கூட்டத்திற்கு நேரடியாக வரும்படி அழைப்பு விடுத்திருந்தோம். அவர் ஒரு வேளை
வந்திருந்தால் இந்தக் கூட்ட நெரிசலில் எங்காவது காணாமல் போய்விடுவார்.
எனவே, அவருக்கு வழி விடும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்த மேல்
மாகாணசபை உதய கம்மன்பில, வாக்குறுதிப்படி அரசியலில் இருந்து அசாத் சாலி
ஒதுங்காவிட்டால் இனி அவர் ஒரு அரசியல் நடை பிணம் என தெரிவித்தார்.
இதற்கு மேலும் அவர் அரசியலில் நிலைக்கக் கூடாது என மேலும் வலியுறுத்திய உதய
கம்மன் பில நாட்டை மீட்டுத்தந்த மஹிந்த ராஜபக்சவே எமக்கு வேண்டுமே தவிர
விடுதலைப்புலிகளின் கையில் நாட்டை ஒப்படைக்க முனையும் மைத்ரி – ரணில் ஆட்சி
தேவையில்லை எனக்கூறி மஹிந்த ராஜபக்சவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுப்பதாக
தெரிவித்ததோடு அவராக வராவிட்டால் அவரைத் தேடிச் சென்று அவரை அரசியலுக்குள்
அழைத்து வர தாம் தயார் எனவும் தெரிவித்ததோடு இரண்டு வாகனங்களுக்காகவும்
எரிபொருளுக்காகவும் ஆட்சியாளர்கள் பக்கம் இருக்காமல் ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணியினர் மஹிந்தவின் வெற்றிக்காக ஒன்றிணைய வேண்டும் என
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



0 Comments