முதலமைச்சர்
விவகாரம் திறந்து விட்ட சோடா போல பொங்கி முடிந்து விட்டது.என்றாலும் நமது
கிழக்கு மாகாண மக்கள் மற்றுமொரு சவாலுக்கு மிக விரைவில் முகம் கொடுக்க
வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாண அமைச்சரவை
மாற்றம் மிகவிரைவில் வர உள்ளது எமது நாட்டின் சகல மக்களும் நன்றாக
அறிவார்கள். அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் முதல்வர் அம்பாரைக்கு
வரவேண்டும் என சகல தரப்புக்களும் கோரிக்கை விடுத்தும் அது துஆ கட்சி
தலைவரும்,மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்தவருமான அல்ஹாபில் நசீர் அஹமத்
அவர்களுக்கு வழங்கிய விடயமானது சகல தரப்பினர்களினதும் விமர்சனத்தை
பெற்றுள்ளது உலகறிந்த உண்மையே. முழு பூசணியை சோற்றில் மறைக்க முஸ்லிம்
காங்றஸ் தலைமை எடுத்த முயற்சி ஓரளவுக்கு வெற்றியையே சந்தித்தது எனலாம்.
அண்மையில் கிழக்கு முதல்வர் தமது ஊடக அறிக்கை ஒன்றில் கௌரவ ஜனாதிபதியின்
இந்திய விஜயம் முடிந்து நாடு திரும்பியதும் அமைச்சரவை நியமனம் இடம்பெறும்
என தெரிவித்திருந்ததுடன் அம்பாரை மாவட்டதிற்கு ஒரு அமைச்சும் கிடைக்கும்
என்றார்.
இதன் மூலம் மற்றுமொரு பிரதேச,இன,மத வாத முரண்பாடு ஆரம்பமாக உள்ளது தெளிவாக தெரிகிறது.
புதிதாக நியமிக்க பட உள்ள அமைச்சரவையில் அம்பாரை மாவட்டதிற்கு ஒரு அமைச்சு கிடைக்கும் எனில் அதனை பெற போவது யார்?
1. இரண்டு தடவைகள் மாகாண சபை உறுப்புரிமை கிடைத்தும் மு.கா தலைமைத்துவத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு முதலமைச்சர் கிடைக்கும் எனும் கனவுகளுடன் எந்த வித அமைச்சுக்களையும் மாகாணத்தில் பெறாது தேசிய அரசிலும் இராஜாங்க அமைச்சும் பெறாது இந்த அமைச்சு கட்டாயம் கிடைக்கும் எனும் எதிர்பார்புடன் இருக்கும் கோட்டை கல்முனை தொகுதியா?
இல்லை வழமை போன்று முஸ்லிம் காங்கிரேஸ் கட்சியை காப்பாற்றி எதிர்வரும் பொதுதேர்தலில் முன்னால் அமைச்சர் ALM. அதாவுள்ளாவையும் தேசிய காங்கிரேஸ் கட்சியையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக அல்லது கடந்த 2 மாகாண சபை ஆட்சியின் போதும் பிரதிமுதல்வர் போல இருந்து செயற்பட்டு மக்களுக்கு சேவைகளை வாய்பேச்சில் அன்றி செயல் ரீதியாக காட்டிய மா.ச.உறுப்பினரும் முன்னால் மா.ச அமைச்சருமான உதுமாலெப்பை அவர்கள் தொடர்ந்தும் மக்கள் சேவை செய்ய அனுமதிக்கும் தூய நோக்கில் பொத்துவில் தொகுதியிலா?
அல்லது எந்த வித அரசியல் அங்கீகாரமும் இன்றி மு.கா தலைமையையும் கட்சியையும் பல துரோகங்களையும், துன்பகர நிகழ்வுகளையும் மறந்து முஸ்லிம் கொங்கிரெஸ் கட்சி கடந்த பொதுத்தேர்தலின் பொது தேசிய பட்டியல் மூலமாவது ஒரு உறுப்பினரை தரும் என்ற கனவை கலைத்துவிட்ட நிகழ்வை சரிசெய்யும் நோக்கில் தொடர்ந்தும் MIM. மன்சூர் அவர்களை அம்பாரை மாவட்டத்தின் சார்பில் நியமித்து அரசியல் அங்கீகாரத்தை சம்மாந்துரை தொகுதிக்கு வழங்குவதா?
இல்லை முஸ்லிம்,தமிழ்.சிங்கள உறவை கட்டியெழுப்பவும் ஐக்கிய தேசிய கட்சியுடன் சிறந்த உறவை பேணி எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சலுகைகளை பெற முயற்சிப்பதற்காக அம்பாரை தொகுதிக்கு வழங்குவதா?
எது எப்படியாக இருந்தாலும் இந்த அமைச்சரவை நியமனத்தில் பலத்த பிரதேச வாதமும் இனவாதமும் தலைதூக்க இருப்பது நன்றாக தெரிகிறது. முதலமைச்சர் நியமித்த விடயம் சம்பந்தமாக தமிழ் மக்களும்,தமிழரசு கட்சியும் வெகுவாக புகைந்து கொண்டிருப்பதை பட்சோந்தி தனமிக்க ஒருசில ஊடகங்கள் திரிவுபடுத்தி குளிர்காய முனைவதும் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்றே!
சகல முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்களையும் மடையர்களாக்கி இந்த மாகாண அமைச்சர் நியமனத்தை மையமாக வைத்து ஒருசில பம்மாத்து, பகட்டு ,வங்கோரோத்து அரசியல் கட்சிகள் எதிர்வரும் பொதுத்தேர்தல் காய்நகர்த்தல்களை நகர்த்த முனைகிறது.அத்துடன் ஒன்னுமொரு சாரார் இனங்களுக்கிடையிலும்,பிரதேசங்களுக்கிடையிலும் சண்டைகளை மூட்டிவிடும் சதித்திட்டங்களை மக்கள் முறியடித்து ஒற்றுமையுடன் எப்போதும் வாழ முன்வர வேண்டும் எனவும். அரசியல் கட்சிகள் பதவிகளுக்கு நாயும் கறிசட்டியும் போல போராடது மக்கள் நலனிலும் அக்கரை கொண்டு நீண்ட துரநோக்கு சிந்தனையுடனும்,விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொள்ளுமாறு அனைவரையும் வேண்டிகொள்கிறேன்.என தேசிய மனித உரிமைகள் கட்சியின் தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் அல்-ஹாஜ் ஹுதா உமர் வேண்டுகோள் விடுத்தார்.


0 Comments