Subscribe Us

header ads

அம்பாறை மாவட்டம் முழுவதும் பாரிய எதிர்ப்பு ஊர்வலமும், அமைச்சர் றஊப் ஹக்கிமுக்கு கொடும்பாவி எரித்தலும்

சூறாவளி -

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றஊப் ஹக்கிமினால் அம்பாறை மாவட்டம் தொடர்ச்சியாக புறக்கனிக்கப்பட்டு வருகின்றதை கண்டித்து நாளை அம்பாறை மாவட்டம் முழுவதும் பாரிய எதிர்ப்பு ஊர்வலமும், அமைச்சர் றஊப் ஹக்கிமுக்கு கொடும்பாவி எரித்தலும் இடம்பெறவுள்ளது.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு முதலமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டன. இதில் எஞ்சிய மாவட்டம் அம்பாறையாகும் இந்த மாவட்டத்துக்குத்தான் இம்முறை முதலமைச்சுப் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இருந்து வந்தனர்.

இந்நிலையில் இன்று (05) காலை மு.காவின் தலைவரின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான சந்திப்பின்போது, அம்பாறை மாவட்டத்துக்கு முதலமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனை முற்று முழுதாக அமைச்சர் ஹக்கீம் மறுத்துவிட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்குத்தான் முதலமைச்சுப் பதவியை வழங்க வேண்டும் என்ற ஒரே பிடிவாதத்தில் இருந்தார்.

அதற்கான காரணத்தையும் மு.காவின் தலைவர் முன்வைத்தார். அவைகள் பின்வருமாறு,
01.முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராகவும் கட்சியின் கட்டுப்பாட்டையும் மதிக்காமல் தான் விரும்பும் தொனியில் நடந்து கொள்ளும் கட்சியின் தவிசாளரை ஓரம் கட்டவேண்டும்.
02. தலைமைக்கு ஒரு கதையும், மக்களிடத்தில் ஒரு கதையும் கதைக்கும் பசீரை தூக்கவேண்டும்.
03.பசீரை மக்களிடத்தில் இருந்து ஓரம் கட்டுவதற்கும், கடந்த காலங்களில் ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் இருந்தும் என்ன சேவைகள் செய்தார் என்ற கேள்விகளை உண்டாக்குவதற்குமாகவே தற்போது ஹாபிஸ் நஸீருக்கு முதலமைச்சுப் பதவியை தான் வழங்கவுள்ளேன். என்று இவ்வாறு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
இந்த சந்திப்பின்போது ஹாபிஸ் நஸீர், ஜெமீல் மற்றும் தவம் ஆகியோர் ஏன் இன்னும் ஏன் வரவில்லை என்பதை தலைவர் றஊப் ஹக்கீமிடம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த உறுப்பினர் நஸீர் சுட்டிக்காட்டினார்.

அப்போதுதான் றஊப் ஹக்கீம் தொலைபேசி ஊடாக ஹாபீஸ் நஸீரை தொடர்பு கொண்டு வரவழைத்தார். இதேவேளை ஜெமிலை தொடர்பு கொண்டபோது ஜெமிலின் தொலைபேசி இயக்கத்தில்லை என்று தெரிவித்த அவர் தவம் காலை 6.00 மணிக்கு வந்து முதலமைச்சுப் பதவியை ஹாபிஸ் நஸீருக்கு வழங்க முழு சம்மதம் என்று தெரிவித்து தனது கையொப்பத்தை இட்டுவிட்டு சென்று விட்டார் என்ற செய்தியையும் தெரிவித்தார்.

இந்நிலைமையில் ஜெமிலின் இரஜினமா கடிதத்தை அவரின் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர் அறூஸ் வந்து றஊப் ஹக்கீமிடம் கடிதத்தை நீட்ட இது என்ன என்று கேட்டார். அதற்கு அவர் சொன்னார் இது ஜெமிலின் இராஜினமா கடிதம் என்று சொல்ல அதற்கு சீறிப் பாய்ந்தார் அந்த பொலிஸ் உத்தியோகத்தரிடம்.

ஹாபீஸ் நஸீருக்கு முதலமைச்சுப் பதவியை வழங்கவேண்டும் என்ற முடிவை றஊப் ஹக்கீம் ஓரிரு தினங்களுக்கு முன்னர் இந்த முடிவை எடுத்துவிட்டார். இந்த முடிவை எடுக்கும்போது செயலாளர் ஹசன் அலி, தவம் மற்றும் ஹாபிஸ் நஸீர் ஆகியோர் இருந்து கொண்டுதான் இவை எடுக்கப்பட்ட விடயம் அப்போதுதான் மற்றய உறுப்பினர்களுக்கு தெரியவந்தது.

இந்த முடிவை எடுக்க முழு ஆதரவினை கட்சியின் செயலாளர் ஹசன் அலி வழங்கக் காரணம் பற்றி அவர் அவரின் உறவினர் ஒருவருக்கு தெரிவித்தவை வெளியில் கசிந்துள்ளன.

அவைகள், அம்பாறை மாவட்டத்தில் முதலமைச்சுப் பதவி வழங்கினால் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமை தனக்கு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தினாலும், எதிர்காலத்தில் தனது செயலாளர் பதவிக்கும் ஆப்பு வந்துவிடும் என்ற நிலைமையையும் கருத்திற் கொண்டே இந்த முதலமைச்சுப் பதவியை மட்டக்களப்புக்கு வழங்க வேண்டும் என்ற திட்டத்தை தான் முன்வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரியவருவதாவது, ஹாபிஸ் நஸிருக்கு முதலமைச்சுப் பதவி வழங்க ஆதரவு வழங்கவேண்டும் என்பதற்காக தவத்துக்கு ஒரு தொகை பணம் ஹாபிஸ் நஸிரினால் பெற்றுக் கொடுக்கப்பட்டடுள்ளன என்பதையும் கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

இதேபோல் கல்முனையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் பாராளுமன்ற பதவிக்கும் ஆப்பு வைக்க தற்போது பாரிய சதித்திட்டம் அமைச்சர் றஊப் ஹக்கிமினால் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றது.

இதனை அம்பாறை மாவட்ட மக்களின் காதுக்கு எட்டிவிட்டதை அடுத்து முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஆத்திரமடைந்து நாளை ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கும், அதன் செயலாளர் ஹசன் அலி மற்றும் தவத்துக்கும் பாரிய எதிர்ப்புக்களைத் தெரிவித்து றஊப் ஹக்கிமுக்கு கொடும்பாவியும் எறிக்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments