Subscribe Us

header ads

இத்தாலி­யில் விலைமாதர்கள் வேடத்தில் பெண் நகரசபை உறுப்பினர்கள் : வசமாக சிக்கிய வாகன சாரதிகள்


இத்­தா­லியை சேர்ந்த நகர மேயர் ஒருவர் சட்டவிரோத விப­சா­ரத்தை கண்­டு­பி­டித்து முறி­ய­டிக்க விநோத வழி­மு­றையைக் கையாண்­டுள்ளார்.

காஸ்டெல் வொல்­துர்னோ நகர மேய­ரான திமித்ரி ருஸோ, பெண் நகர சபை உறுப்­பி­னர்­க­ளான அனஸ்­டா­ஸியா பெட்ரெல்லா மற்றும் ஸ்டெப­னியா சன்­கர்­மனோ ஆகி­யோரை விலை மாதர்கள் போன்று குட்டை பாவா­டை­யுடன் வீதியில் நிறுத்­தி­யுள்­ளார்.
இதன்­போது அந்த போலி விலை­மா­தர்­களை அணு­கிய ஆண்­களை இர­க­சி­ய­மாக புகைப்­ப­ட­மெ­டுக்க ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.
இந்­நி­லையில் மேற்­படி பெண் நகரசபை உறுப்­பி­னர்­களை விலை மாதர்கள் என கருதி அவ்­வ­ழி­யாக சென்ற சார­திகள் அணு­கிய போது, அருகில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­ன­மொன்றின் பின்­ப­கு­தியில் புகைப்­படக் கலை­ஞ­ருடன் மறைந்­தி­ருந்த நகர மேயர் அவர்­களை எதிர்­கொண்டு அதிர்ச்­சியில் ஆழ்த்­தினார்.
கையுங்­க­ள­வு­மாக பிடிக்­கப்­பட்ட அந்த சார­திகள் தமது செய­லுக்­காக தண்­டப்­பணம் செலுத்த நேர்ந்­தது. இத்தாலியில் பணத்தை செலுத்தியும் பெற்றும் பாலியலில் ஈடுபடுவது சட்டவிரோதமானதாகும்.

Post a Comment

0 Comments