தலைகவசத்தினால்
முகத்தை முற்றாக மறைத்துக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொள்ளைச் சம்பவங்கள்
மீண்டும் உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தின் ஆரம்ப காலப்பகுதியில் இன்று வரை 5 சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார்.
ஏற்கனவே கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு கைது செய்யபட்ட குழுக்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தும் புதிய குழுக்கள் தற்போது தோற்றம் பெற்றுள்ளன.
கடந்த வருடத்தில் 122 கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில். அவற்றில் 80 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நிவர்த்திக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முகத்தை முற்றிலும் மறைக்கும் தலைக்கவசங்களை அணியக் கூடாது என இலங்கையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
எனினும், இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது கடந்த வருடத்தில் பலதரப்பினர் தமது எதிர்ப்புகளையும், அழுத்தங்களையும் பிரயோகித்தனர்.
எவ்வாறாயினும், முகத்தை மறைக்கும் தலைக்கவசங்களை அணியக் கூடாது என்ற சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹன தெரிவித்தார்.
அண்மைக் காலங்களில் மோட்டார் சைக்கிள்களில் வந்த கொள்ளையர்கள் 5 நிதி நிறுவனங்களில் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 Comments