கட்டார் எயார்வேஸ் விமானங்களில் விமானப் பணிப்பெண்களாக கடமையாற்றுபவர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பினால் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற வேண்டுமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களை அந்நிறுவனம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
திருமணமான விமானச்சிப்பந்திகளை கட்டார் எயார்வேஸ் நிறுவனம் பணிநீக்கம் செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச போக்குவரத்து ஊழியர்கள் சம்மேளனம் 2013 ஆம் ஆண்டு இக்குற்றச்சாட்டை முன்வைத்திருந்தது.
அண்மையில் வோஷிங்டன் போஸ்ட் பத்திரிகை இது தொடர்பான செய்தியை
பிரசுரித்ததையடுத்து இத்தகவல் வேகமாகப் பரவியது.
இது குறித்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அக்பர் அல் பக்கரிடம் சி.என்.என். அலைவரிசை கேட்ட போது, மேற்படி தகவல்களில் உண்மையில்லை என அவர் பதில ளித்துள்ளார்.
Metro
Metro
0 Comments