Subscribe Us

header ads

மழையிலும் கலைகட்டிய அல் அக்ஸா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி... (படங்கள் இணைப்பு)


2015ஆம் கல்வி ஆண்டிற்கான இல்ல விளையாட்டு போட்டியின் நிகழ்வுகள் ஜனவரி மாதம் முதல் அல் அக்ஸா தேசிய பாடசாலையின் நடைபெற்று வந்தது. இந்த விளையாட்டு போட்டிகளின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று (24.02.2015) செவ்வாய்க்கிழமை அதிபர் திருமதி ரோஸ் புஹாரி தலைமையில் பாடசாலை மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மின்­வலு சக்தி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்­டார கலந்துகொண்டார். இவருடன் வடமேல் மாகாண சபை உறுப்புனர் S.H.M நியாஸ், கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களான A.M இன்பாஷ், ஜூட் எம்மானுவேல், A. அலாவுதீன், J.M தாரிக், A.R.M பௌஷான், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் M.H மொஹம்மத் (உஹது) கல்பிட்டி கோட்ட கல்வி பணிப்பாளர் திரு .அனீஸ் முன்னாள் பணிப்பாளர்  திரு. நூஹு லெப்பை, இப்பாடசாலையின் முன்னாள் அதிபர் மௌலவி யூசுப், இப்பாடசாலையின் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் உட் பலர் கலந்து சிறப்பித்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர். 

இறுதியாக அனைவரையும் கவர்ந்த மூன்று இல்லங்களினதும் அணிநடை நிகழ்வு. இம்முறை அணிநடையில் முறையே மதீனா, மக்கா , ஜெருசலம் இல்லங்கள் 1ஆம், 2 ஆம்  இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை 348 புள்ளிகளைப் பெற்று மக்கா இல்லம் முதலிடத்தையும் 311.5 புள்ளிகளைப் பெற்று ஜெருசலம் இல்லம் இரண்டாமிடத்தையும் 285.5 புள்ளிகளைப் மதீனா இல்லம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டது

அதிதிகளின் உரையைத் தொடர்ந்து புள்ளிகள் அறிவிக்கபட்டு பெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து அனைவரினதும் மனதை தொட்ட இவ்விளையாட்டு போட்டி இனிதே சலவாத்துடன் நிறைவு பெற்றது.

படங்கள் தொகுப்பு : Mohamed Faris Munaf / Amjath Faiz




























Post a Comment

0 Comments