சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் என்னால் விளையாட முடியும் என்று இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரோடு இலங்கை அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறவுள்ளனர்.
இந்நிலையில் தற்போது தனக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என்று டில்ஷான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்இ ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடும் எண்ணம் எனக்கிருக்கிறது.
உலகக்கிண்ணத் தொடர் முடிந்த பின்னர் இது குறித்து, இலங்கை அணித்தலைவர் மற்றும் அணி நிர்வாகத்திடம் நான் கலந்துரையாடவுள்ளேன். அனுபவ வீரர்களான மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போகிறார்கள்.
எனவேஇ எனது அனுபவம் இலங்கையணிக்கு கைகொடுக்கும் என நான் நம்புகின்றேன். தற்போதைய எனது உடல் நிலை மற்றும் தகுதியை வைத்துக் கொண்டுஇ என்னால் இன்னும் இரண்டுஇ மூன்று வருடங்கள் விளையாட முடியும். 2019 உலகக்கிண்ணம் வரை விளையாட எதிர்பார்க்கின்றேன், எனக்கு உடற்தகுதி காணப்படாத பட்சத்தில் ஓய்வு பெற்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.
0 Comments