நுவரெலியாவிலுள்ள உலக முடிவைப் பார்வையிடச் சென்ற சீனப் பிரஜை ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக, விமானப்படை ஊடகப் பேச்சாளர் விங்கொமாண்டர் கிஹான் சேனவிரத்தன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து, விபத்துக்குள்ளான சீனப் பிரஜையுடன் சென்ற மற்றைய சுற்றுலாப் பயணிகள் பொலிஸாரிடம் தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தியதலாவ இராணுவ முகாம் சிப்பாய்கள் ஹெலிக்கொப்டர் மூலம் அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிஹான் சேனவிரத்தன தெரிவித்தார்.


0 Comments