பிரதம நீதியரசர் நீக்கம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இடமளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார்.
புதிய பிரதம நீதியரசர் நியமனம், முன்னாள் பிரதம நீதியரசர் பணி நீக்கம் என்பன தொடர்பில் எதிர்க்கட்சிகள் கோரிய விவாதத்திற்கு இடமளிக்க இணங்கப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். இதற்காக விசேட பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்படும்.
பாரபட்சமின்றி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவர்.
குற்றம் இழைத்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களா அல்லது சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களா என கவனிக்கப்பட மாட்டாது.
குற்றச் செயல்கள் தொடர்பிலேயே கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நேரடி நேர்காணல் ஒன்றில் நேற்று பங்கேற்ற போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


0 Comments