-செய்யித் பினோஸ்-
ஐக்கிய
தேசிய கட்சியும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை முஸ்லிம்
காங்கிரசும் ஒன்றிணைந்து புத்தளம் தேர்தல் தொகுதியில் யானை சின்னத்தில்
களமிறங்க உள்ளதாக உத்தியோக பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு
முன்னரும், கடந்த மாகான சபை தேர்தலில், மூன்று முஸ்லிம்கள் அபேட்சகர்களாக
நிறுத்தப்பட்டும்கூட யாருக்கும் வெற்றிபெற முடியாமல் போனது.
மூன்று முஸ்லிம் அபேட்சகர்களுக்கும் சமனாக விருப்பு வாக்குகள் அளிக்கப்பட்டிருப்பின், மூன்று பேரும் வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறாமால் தனித்தனியே தங்களின் பிரதேசங்களில் விருப்பு வாக்குகளை பிரித்து வழங்கியதன் விளைவாக யாரும் வெற்றி பெற முடியாமல் போனது. இதுவே கடந்த காலங்களிலும் நாம் பெற்றுக் கொண்ட அனுபவம்.
இம்முறையும் மூன்று முஸ்லிம்கள் பொதுத் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டாலும் மூன்று பேருக்கும் விருப்பு வாக்கினை முஸ்லிம்கள் வழங்குவார்களா? எனபது கேள்விக் குறியே.
முஸ்லிம் காங்கிரசானது ஐக்கிய தேசிய கட்சியின் கை ஓங்கி இருக்கும் காலங்களில் மரச் சின்னத்தில் போட்டியிடுவதை தவிர்த்து வந்துள்ளது. உதாரணமாக 2002 ஆம் புத்தளம் நகர சபை தேர்தல், 2004 வடமமேல் மாகாண சபை தேர்தல்களை குறிப்பிடலாம்.. இந்தக் காலப் பகுதியில் யானை சின்னத்திலேயே போட்டியிட்டனர். அது போல ஐக்கிய தேசிய கட்சி வீழ்ச்சி கண்டிருந்த காலப் பகுதியில் தனியே மரச் சின்னத்தில் போட்டியிட்ட வரலாறும் உள்ளது. உதாரணமாக 2011 புத்தளம் நகர சபை தேர்தல், 2013 மாகாண சபை தேர்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம். எனவே அவர்கள் இம்முறையும் நிச்சயம் யானை சின்னத்தோடு இணைந்து போட்டியிடுவார்கள் என்பது உறுதியாகியுள்ளது.
ஆக மீண்டும் பெரும்பான்மை கட்சிக்கே புத்தள முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கப் போகின்றன. பெரும்பான்மை கட்சிக்கு வாக்களித்து மீண்டும் சோற்றில் கிடக்கும் கறிவேப்பிலையாக புத்தளம் முஸ்லிம்களின் வாக்குகள் மாறப் போகின்றனவா?
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளத்தை தவிர்ந்த ஏனைய நான்கு தொகுதிகளிலும் (நாத்தண்டிய, சிலாபம், ஆனைமடு, வென்னப்புவ) மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றார். இத் தொகுதிகளில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் கூட அவர்களுக்கு அவர்களின் சொந்த தொகுதியை மைத்திரிக்கு சார்பாக வெற்றி பெறச்செய்ய முடியாது போனது. மாகாண சபை, பாராளுமன்றம் என அனைத்திலும் அநாதையாகி நிற்கும் புத்தளம் தேர்தல் தொகுதியில் இருந்து பாரிய வெற்றியினை மைத்திரிக்கு பெற்றுக் கொடுத்தோம். அதனால் தான் புத்தளம் மாவட்டம் மைத்திரிக்கு சார்பாக மாறியது. ஆனால் அதன் பிரதிபலனை புத்தளம் தேர்தல் தொகுதிக்கு வெளியில் உள்ள நிரோசன் பெரேராவும் ரங்கா பண்டாரவும் அமைச்சு பதவிகள் மூலம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இது தான் எமது வாக்குகளுக்கும் நடக்கின்றன.
நாம் ஒவ்வொரு முறையும் யானைக்கும் வெற்றிலைக்கும் வாக்களித்து தொகுதியை வென்று கொடுக்க, யாரோ பாராளுமன்றம் செல்கிறார்கள். ஐக்கிய தேசிய கட்சியில் நிரோசன் பெரேரா, பாலித ரங்கே பண்டார, அசோகா வடிகமங்காவ, ஹெக்டர் அப்புஹாமி, சாந்த ஆகியோர் இப்பொழுதிருந்தே தங்களின் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டார்கள். புத்தளம் தேர்தல் தொகுதியில் இம்முறை ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று புத்தளம் மாவட்டம் வெற்றி பெருமானால் நிச்சயம் மேலே குறிப்பிட்ட ஐந்து பேரும் பாராளுமன்றம் செல்வார்கள். நாம் வழமை போல வாய் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியது தான்.
கடந்த ஆறு தேர்தல்களில் நாம் பெற்ற அதே படிப்பினையை இம்முறை மூன்று உறுப்பினர்களை போட்டியிட செய்து பெறப் போகிறோம் எனபது மட்டும் உறுதி.. சிந்திப்போம்செயல்படுவோம்.

நன்றி: TPT

0 Comments